சீரியல் எடுத்துக் கொண்டிருந்த எம்.திருமுருகன் எம் மகன் திரைப்படம் மூலம் சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்தார். பரத், நாசர், சரண்யா,வடிவேல்,கோபிகா, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கண்டிப்பான அப்பா, காதல், பாசம், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்த படமாக 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தில் நடித்தது குறித்து பரத் ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார்.
|நாயகனை, அவனுக்கு பிடிக்காத சாப்பட்டை சாப்பிட சொல்லி அப்பா வற்புறுத்துவார். மறுக்கவே அப்பாவுக்கு கோபம் வந்து விடும். மகனை அடி பின்னி எடுத்து விட்டுவார். அந்த சீனில் உண்மையாகவே நாசர் என்னை அடித்து விட்டார்.
காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் நாசர் கதையுடன் அப்படியே ஒன்றி விட்டார். என்னுடன் சேர்த்து வடிவேல்,சரண்யா மேடத்துக்கும் அடி விழுந்தது” என்று எம் மகன் படத்தின் சம்பவம் குறித்து பரத் பேசினார்.