‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விவேக், உதவி இயக்குநர் கதாபாரத்தில் நடித்தார். ஒரு நடிகரிடம் அவர் கதை சொல்லும்படியான காட்சி படத்தில் இருந்தது. படத்தின் இயக்குநர் ராமநாராயணன், ‘உங்களுக்கு பிடித்த பெரிய நடிகர் யாரையாவது கதை கேட்பதுபோல் காட்சி அமைத்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
விவேக்கும், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய், மற்றும் பிரசாந்த் ஆகியோரை குறிப்பிட்ட காட்சியில் நடிக்க வரும்படி அழைத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர்.
பிறகு அந்த காட்சியை விஜயகாந்திடம் சொன்னார். உடனே சம்மதம் கூறி நடித்து கொடுத்தார். அந்த நேரத்தில் விஜயகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பின் நாளில் ஒரு பேட்டியில் கூறி வருத்தப்பட்டார் விவேக்.