இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் விக்ரமன். புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். விஜயகாந்தை வைத்து வாணத்தைபோல, மரியாதை ஆகிய படங்களை இயக்கினார் விக்ரமன். அரசியலுக்கு விஜயகாந்த் வந்த பிறகு அவரை பார்க்க விக்ரமன் சென்று இருக்கிறார்.
அவர் போன நேரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு.. மேடையில் இருந்து ஓடி வந்த விஜயகாந்த். விக்ரமனை அழைத்துக் கொண்டு உதவியாளரிடம் சாரை எனது அறையில் தங்கவை அவர் தம்மு அடிப்பார் ஜன்னல்களை திறந்து வை. உதவியாளரிடம் கூறிவிட்டு பின் மேடைக்கு சென்று இருக்கிறார்.
பெரிய இடத்துக்கு வந்தாலும் பழகியவர்களை மறக்காதவர். அத்தனை பேர் மத்தியில் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஓடி வந்தார் விஜயகாந்த். தனது இயல்பை எந்த நிலையிலும் இழக்காதவர் இப்படிப்பட்டவர் தான் அவர். அதைவிட பெருமை என்ன இருக்கிறது என்று உணர்ச்சி பொங்க ஒரு பேட்டியில் கூறினார் இயக்குனர் விக்ரமன்.