இது நம்ம ஆளு திரைப்படம் பாக்யராஜ்.சோபனா நடிப்பில் 1988 ஆண்டு வெளியானது. அப்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் பாடல் இசை அத்தனையும் அற்புதம். இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த படத்தில் முதன் முதலாக இசையமைத்திருக்கிறார் பாக்கியராஜ். வழக்கமாக இவரது படங்களுக்கு கங்கை அமரன், அல்லது இளையராஜா இசையமைப்பது வழக்கம்.
இதற்கான காரணம் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க சொல்ல அவரது ஸ்டூடியோவுக்கு பார்க்க சென்று இருக்கிறார் பாக்கியராஜ். ஆனால் ராஜாவின் உதவியாளர் நீங்கள் அவரை வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இது என்ன புதுசா இருக்கு நான் அவரை எப்போதும் இங்குதானே சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு உதவியாளர் உங்களை அங்கு வந்து தான் பார்க்க சொன்னார்கள் எனக் கூற.உடனே பாக்கியராஜ் நான் ஏன் அங்கு போய் பார்க்க வேண்டும். தன்மான அவரை தடுக்க திரும்பி விட்டார் பாக்கியராஜ்
அதன் பிறகு தான் இது நம்ம ஆளு திரைப்படத்தில் அவரே இசையமைத்தார். இப்படித்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் பாக்கியராஜ்..
.