Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“ நயன்தாராவை காப்பி அடிப்பது தவறு!: நடிகை வனிதா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் பிரபலங்கள் படை சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகியிருக்கிறார். அவர்  திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகள் பெரும் அளவு பேசப்பட்டது.

திருமணத்தின் போது அணிந்திருந்த சிவப்பு நிறம் கொண்ட புடவை,  பச்சை கல் நகைகள் பலரையும் கவர்ந்தது. அதே போன்று உடை அணிந்து நடிகையர் மற்றும் சிலர் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டனர்.

இதற்கு நடிகை வனிதா, “நயன்தாரா மிகவும் யோசித்து, தனக்கான நகை, புடவை, அதன் டிசைன், வண்ணம் எல்லாம் தேர்ந்தெடுத்து இருப்பார். அது அவரது கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது. அதை மிக எளிதாக சிலர் காப்பி அடித்து இன்று வரை அதே போன்ற ஆடை, நகை அணிந்து போஸ் கொடுக்கிறார்கள். இது தவறு. அவரவர் தங்கள் சொந்த ஐடியாவில் நகை, ஆடை வடிவமைத்து அணிவதே சரி” என காட்டமாக சொல்லி இருக்கிறார் வனிதா.

- Advertisement -

Read more

Local News