நடிகர் கதிர் சமீபத்திய வீடியோ ஒன்றில், “ஸாக் ஹாரீஸ் இயக்கத்தில், நட்டி, கயல் ஆனந்தி உள்ளிட்டோருடன் யூகி படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்கியராஜ் கதை, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு என முக்கியமானவர்கள் இணைந்து உள்ளனர்.
ஆனால் இயக்குநர் ஸாக், இந்த கதையைச் சொன்னபோது, எனக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கதை நமக்கு செட் ஆகாது என நினைத்தேன். அதையே அவரிடம் சொன்னேன். பிறகு அவர் விளக்கிய பிறகுதான், இது எனக்கான கதாபாத்திரம் என்பதை உணர்ந்தேன். இப்படி சில சமயங்களில் நமக்கான கணிப்பே தவறாகிவிடுகிறது. நல்லவேளையாக இந்த பட வாய்ப்பை மிஸ் பண்ணாமல் இருந்தேன்..” என்றார்.