ஒளிப்பதிவில் மட்டுமின்றி இயக்கத்திலும் முத்திரை பதித்தவர் தங்கர் பச்சான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “சினிமா கனவு என்பது எனக்கு சின்ன வயதில் இருந்தே உண்டு. குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். அப்போது மிக வறுமையில் இருந்தேன். சாப்பாட்டுக்கே சிரமம்தான். ஆனாலும், அமெரிக்கன் சினிமாடோகிராபர்’ என்கிற இதழை… இது, மூவி கேமராவேனுக்கு இருக்கிறத ஒரே இதழ்.. அமெரிக்காவில் இருந்து அப்பவே வரவழைச்சேன்…! 37 வருசமா அந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்கிறேன்” என்றார் பச்சான்.
‘தங்க’ பச்சான்!