பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமார் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “படிகளில் வேகவேகமாக ஏற வேண்டிய காட்சி… ஏற்கெனவே பிரச்சினையில் இருந்த காலில் படக் என்று சத்தம்.. உயிர் போகும் வலி.. என்னை அறியாமல், ‘கட் கட்’ என கத்தி விட்டேன்.
இயக்குநர் மணிரத்தினமோ, ‘நல்லாத்தானே நடிச்சீங்க.. ஏன் கட்னு சொன்னீங்க’ என்றார்.
நான் நொந்துபோய், விவரத்தைச் சொன்னேன். பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன்” என்றார்.