Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

கலைஞானத்தை கதறவிட்ட கீதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கதை வசனகர்த்தா கலைஞானம் தயாரிக்க, கே.பாஸ்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் நடித்து
1978ல் வெளியான வெற்றித் திரைப்படம் பைரவி.

ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது.

ஆனால் இந்தத்திரைப்படம் பாதியிலேயே நின்றுவிடும் சூழல் ஏற்பட்டது. அதற்குக் காரணம், இப்படத்தில் அறிமுகமான கீதா.

இது குறித்து கலைஞானம் கூறுகையில், “கீதாவுக்கு இது முதல் படம். இயக்குநர் சொல்லும் நான்கு வரி வசனத்தைக் கூட அவரால் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் டென்சன் ஆன இயக்குநர், பேக் அப் சொல்லி, படப்பிடிப்பை ரத்து செய்யச் சொல்லிவிட்டார்.

அப்படி ரத்தானால், ஒட்டுமொத்த பணமும் வேஸ்ட். பதறிப்போய்விட்டது எனக்கு. பிறகு கீதாவிடம், ஒவ்வொரு வரியாக சொல்லிக் கொடுத்து ஒரு வழியாக அக்காட்சியில் நடிக்க வைத்தேன். படமும் வெளியாகி வெற்றி பெற்றது.

அப்படி முதல் படத்தில் நடிக்கத் திணறிய கீதாதான்,  அடுத்தடுத்த படங்களில் அற்புதமாக நடித்து முத்திரை பதித்தார்” என்றார் கலைஞானம்.

- Advertisement -

Read more

Local News