ரஜினிக்கும் தனக்கும் இடையிலான ஒரு சம்பவத்தை சொல்கிறார் ராதாரவி:
“ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தை பி.வாசு இயக்குவதாக இருந்தது. அப்போது வாசி, ‘நீதான் வில்லன். படக்குறிப்புகளில் ஆர் ஆர் என உனது பெயரைத்தான் வில்லன் வசனங்களுக்கு முன் குறிப்பிட்டு இருக்கிறேன்’ என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் ரஜினியிடமிருந்து போன். தனது வீட்டுக்கு வரச் சொன்னார்.
அப்போது அவர், ‘அருணாச்சலம் படத்தை பி.வாசு இயக்கவில்லை. சுந்தர் சி. இயக்குகிறார். அதே போல படத்தில் ஒரு வில்லன் என்பதை மாற்றி மூன்று வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கோம். ஆகவே உங்களுக்கு அந்த கதாபாத்திரங்கள் எதுவும் சரியாக வரும் என தோன்றவில்லை.. தவறாக நினைக்க வேண்டாம்’ என்றார்.
இதை கூப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டாம் என தோன்றியது.
அந்த ஆதங்கத்தில், ‘பரவாயில்லை.. சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா? (ரஜினியைச் சுட்டிக்காட்டி) அந்த அதிர்ஷ்டத்தைத் தேடி, (என்னைச் சுட்டிக்காட்டி) இந்தத் திறமை வரவேண்டி இருக்கிறதுதான்’ என்றேன்.
ஆனால் அதற்கு கோபப்படாமல், ‘அடேங்கப்பா.. அடேங்கப்பா’ என சொல்லிச் சொல்லி சிரித்தார் ரஜினி!” என தனது நினைவுகளை கூறினார் ராதாரவி.