Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

கொடுமை: கதறி அழும் லட்சுமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு சமீபத்தில் நடந்த சம்பவம் மிகக் கொடுமையானது.

இது குறித்து அவர் “நான் செய்த தவறை யாரும் செய்யக்கூடாது என்பதால் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். கடந்த செப்டம்பர் 11 அன்னைக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்கன்னு ஒரு மெசேஜ் வந்தது. அதோடு  லிங்க் இருந்தது. தெரியாம . அந்த லிங்கை க்ளிக் பண்ணினேன். உடனே  ஒரு ஆப் என் போனில் இன்ஸ்டால் ஆச்சு.  அடுத்த விநாடி, என் போன் ஹேக் ஆகிருச்சு. அது அப்போ எனக்குத் தெரியல.


சில நாள் கழிச்சி,  நீங்க லோன் வாங்கியிருக்கீங்க அதனால அந்த லோனை உடனடியா அடைங்கன்னு தொடர்ந்து மெசேஜ், போன் வர ஆரம்பிச்சது. ரொம்ப ஆபாசமா பேசி  வாய்ஸ் நோட் அனுப்பினாங்க. நீங்க 5000 ரூபாய் லோன் கொடுக்கலைன்னா உங்க ஃபோட்டோவை எல்லாருக்கும் அனுப்புவோம்னு தொடர்ந்து மிரட்டினாங்க. பயந்துபோய் ஹைதராபாத்தில் சைபர்கிரைமில் புகார் கொடுத்தேன். அவங்க விசாரிச்சிட்டு இருக்காங்க.

இதுக்கு நடுவுல என் வாட்ஸ் அப்பிலுள்ள சில நண்பர்கள் எண்களுக்கு , என் பெற்றோர்களுக்கு என்னை மார்பிங் பண்ணி ஆபாசமா காண்பித்த படம் போயிருக்கு.

அதனால் ஏற்பட்ட மன உளைச்சலை தாங்க முடிலை..

அதனால, லோன் ஆப், லக்கி டிரான்னு எந்த ஆப்பிலிருந்து வர்ற மெசேஜூம் க்ளிக் பண்ணாதீங்க” என்று கலங்கியபடி சொல்கிறார் லட்சுமி.

இது எல்லோருக்குமான எச்சரிக்கைதான்.

- Advertisement -

Read more

Local News