Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

என்னைப் பார்த்து பயந்த பிரபல ஹீரோ: பி.வாசு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பி.வாசு, நடிகர் விஜய் ஆகியோர் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கின்றனர். ஆனால் இருவரும் இதுவரை இணைந்ததில்லை

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “ரஜினி நடிப்பில்  நான் இயக்கிய “பணக்காரன்” படப்பிடிப்பு விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டில் நடைபெற்றது. அப்போது சிறுவனாக இருந்த விஜய், நான்  இயக்கும் முறையை பார்த்து பயந்துவிட்டார்.

விஜய் பெரிய நடிகரான பின் அவரிடம்  எப்படியாவது கதை சொல்லவேண்டும் என நினைத்தேன்.  ஆனாலும் சந்திக்க முடியவில்லை.

எனது  உதவி இயக்குனர் ஒருவரிடம் “விஜய் என்னை பார்த்து பயந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது அவர் வளர்ந்துவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் வளர்ந்துட்டார் என்றால் என்னை அழைக்கச்சொல்” என விஜய்யிடம் கூறுமாறு அவரை அனுப்பியுள்ளார்.

பின் விஜய்யை சந்தித்து ஒரு அரசியல் கதையை கூறினேன்.  ஆனால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் இன்னொரு கதையை அவருக்காக எழுதினேன். ஆனால் விஜயிடம் இருந்து அழைப்பு வரவில்லை.  இது தான் விஜய்யை வைத்து நான் திரைப்படம் இயக்காததற்கு காரணம்” என பி.வாசு கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News