ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் ஸ்ரீகாந்த். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா மற்றும் பலருடன் இணைந்து நடித்த காபி வித் காதல் படமும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது.
இவரிடம், “பல படங்களில் நடித்துவிட்டீர்கள், நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இல்லையா” என கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்ரீகாந்த், “தமிழ்ல, இயக்குநர் என்றால் தாடி வச்சு, மெச்சூர்டான முக பாவனையுடன் இருக்கணும். அப்பத்தான் இயக்குநர்னு ஒப்புக்குவாங்க. நான் எவ்வளவோ ஷேவ் செய்து பார்த்தும் தாடி வளரலை. அதனால இயக்குற ஆசையை விட்டுட்டேன்” என நகைச்சுவையாக பதில் கூறினார்.
ரொம்பத்தான் குறும்பு!