பார்த்திபன் கனவு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட தனது படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
பேட்டி ஒன்றில் இவரிடம், “நீங்கள் எம்.ஏ. படித்தவர். திரைத்துறைக்கு போவதாகச் சொன்னவுடன் உங்கள் அப்பா மறுக்கவில்லையா” என கேட்கப்பட்டது.
அதற்கு கரு.பழனியப்பன், “சினிமாவுக்குப் போறேன் என்று சொன்னவுடனேயே, என் தந்தை சொன்னது இதுதான்.. ‘உனக்கு விருப்பமான வேலையை பண்ணு.. அதுல ஜெயிக்கணும்னு அவசியம் இல்லை.. மகிழ்ச்சியா ஈடுபடு.. அதில தோத்துட்டா, ‘ஆமா, நான் தோத்துட்டேன்’னு மத்தவங்ககிட்ட சொல்ற தைரியம் வேணும். அப்புறம் அந்த வேலையைத் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கிற மனப்பக்குவம் வேணும். அவ்வளவுதான்’ என்று என் அப்பா சொன்னார்” என கரு.பழனியப்பன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த அறிவுரையை எல்லா தகப்பனாரும் தங்கள் மகனுக்குச் சொல்ல வேண்டும்.