Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

செல்வராகவனுக்கு தடை போட்ட கஸ்தூரிராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்த செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என்ற பெயர் பெற்றார்.  சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்றும் முத்திரை பதித்தார்.

ஆனால் இவர் திரையுலகத்துக்கு வருவதை அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா விரும்பவில்லையாம். இதை சமீபத்தில் வெளியான அவரது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

“சிறு வயதில் இருந்தே செல்வராகவனுக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். குறிப்பாக சிறந்த ஆங்கில புத்தகங்களை எடுத்தால் வைக்காமல் படிப்பான். அதே போல உலக அளவில் புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களையும்  பார்ப்பான்.

 இப்படி பாடத்தைவிட்டு, விலகுகிறானே என வருத்தப்பட்டேன்.  அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைத்து, டெக்ஸ்டைல் பிஸினஸில் ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. தனுேஷ்தான் திரையுலகத்துக்கு வரவேண்டும் என நினைத்தேன்.

அதனால், இயக்குநர் கே.பாலசந்திரிடம், ‘திரைத்துறை வேண்டாம்  என செல்வராகவனுக்கு புத்திமதி சொல்லுங்கள்’ என்றேன். அவரும் செல்வராகவனை அழைத்து பேசினார்.

பேசிவிட்டு, ‘இவனிடம் ஏதோ விசயம்  இருக்கிறது. சினிமாவில் பெரிய ஆளாக வருவான். என்னிடமே இருக்கட்டும்’  என்றார்.  சரி, என அவரிடமே உதவியாளராக சேர்த்துவிட்டேன்.

பத்து நாள்தான் போனான்.  ஏன் என்று கேட்டதற்கு, ‘அவர் டிவி சீரியல் இயக்குகிறார்.. நமக்கு தேவையான மைலேஜ்  இல்லை’ என்றான்.

நான் அதிர்ந்துவிட்டேன். பாலசந்தர் எப்படிப்பட்ட இயக்குநர்! அவரையே இப்படிச் சொல்கிறானே என நினைத்தேன்!

 ஆனால் தான் நினைத்த இடத்தை செல்வராகவன் அடைந்துவிட்டான்  என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார் கஸ்தூரி ராஜா.

நினைத்ததை சாதித்துவிட்டார் செல்வராகவன்!

- Advertisement -

Read more

Local News