நடிகை ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அளித்த வீடியோ பேட்டியில், தனது வாழ்க்கை லட்சியம் என இரு விசயங்களைக் கூறி உள்ளார்:
“எப்போதும் பிறருக்கு உதவ வேண்டும் என்பது முதல் லட்சியம். இதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். பணம் சம்பாதிப்பது சேர்த்து சேர்த்து வைப்பதற்கு அல்ல. அதில் ஒரு பகுதியையாவது பிறருக்கு.. தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். இந்த எண்ணத்தினால்தான் கொரோனா காலத்தில் என்னாலான உதவிகளை ஏழை மக்களக்குச் செய்தேன்.
அடுத்த லட்சியம் திரைப்படங்களை இயக்குவது. நடிக்க வந்த புதிதில் இருந்தே, எனது நடிப்பு என்பதோடு நின்றுவிடாமல், சக நடிகர்களின் நடிப்பை கவனிப்பேன். இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரின் பணிகளையும் கூர்ந்து நோக்குவேன்.
இது எல்லாமே, படம் இயக்க வேண்டும் என்கிற லட்சியத்தால்தான்.
ஆனால் அது கமர்சியல் படமாக இருக்காது. மக்களுக்கான ஒரு விசயத்தைச் சொல்லும் படமாக இருக்கும்” என்று தனது லட்சியங்களை தெரிவித்து உள்ளார் ராஷி கண்ணா.