Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘அந்த’ ஹிட் படத்தை தவறவிட்ட தனுஷ்!: கஸ்தூரி ராஜா புதிய தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் குறித்து ஒரு  சுவாரஸ்யமான செய்தியை  சமீபத்திய வீடியோ பேட்டியில் சொல்லி இருக்கிறார் அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா. சம்பவம் பழசுதான். ஆனால் இப்போதுதான் முதன் முறையாக வெளிப்படுத்தி  இருக்கிறார்!

செல்வராகவன் இயக்கத்தில், துள்ளவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானதும், பிறகு பெரிய நடிகராக உலா வருவதையும், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என தனது பன்முகத் திறமயை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்ப்பதையும்  சொல்லித் தெரிய வேண்டியதில்லா.

ஆனால் கஸ்தூரி ராஜா சொல்லி இருப்பது, பழைய சம்பவமானாலும் தகவல் புதுசு!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் – சந்தியா நடித்த காதல் திரைப்படம் பெரு வெற்றி பெற்றது அல்லவா? இது பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படம்.

இப்படத்தில் நாயகனாக நடிக்க துனுசைத்தான் அணுகினார் பாலாஜி சக்திவேல்.  தனுசின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவை சந்தித்து கதையைச் சொன்னார். பிறகு இருவரும், ஏவி.எம். நிறுவனத்தில் கதையைச் சொன்னார்கள். அந்நிறுவனமும் ஒப்புக்கொண்டது. தனுசுக்கும், பாலாஜி சக்திவேலுக்கும் அட்வான்ஸும் கொடுத்தது.

அப்படத்தில் தனுஸ்தான் நாயகன் என்பது உறுதியானது. ஆனால் ஏனோ அந்நிறுவனம் படத்தயாரிப்பை தள்ளிப்போட்டது.  ஆகவே வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்துவிட்டனர் இருவரும்.

இது குறித்து கூயிருக்கும் கஸ்தூரிராஜா,”நான் எத்தனையோ செக் வாங்கி இருக்கிறேன். ஆனால் ராசாவின் மனசிலே படத்துக்காக ராஜ்கிரனிடம் வாங்கிய செக்கும், காதல் படத்தில் நடிக்க தனுசுக்காக ஏவி.எம். நிறுவனத்தாரிடம் வாங்கிய செக்கும்தான் எனக்குப் பெருமை  என நினைத்தேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தம்தான்”  என்று சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News