திருமணத்திற்குப் பிறகு ‘16 வயதினிலே’, ‘பொன்மகள் வந்தாள்’ என ஹீரோயின் ஓரியண்ட் கதைகளில் நடித்து முத்திரை பதித்து வருகிறார் ஜோதிகா.
தற்போது ஜோ பேபி இயக்கத்தில மம்முட்டியுடன் ‘காதல்- தி கோர்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்.
12 ஆண்டுக்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் மலையாள படம் இது.
படத்தின் கதையை, இயக்குநர் ஜோ பேபி சொன்னவுடன், “படத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார். இயக்குநர் ஜோ பேபியோ, “அவர் ஒப்புக்கொள்வாரா” என தயக்கத்துடன் கேட்டு இருக்கிறார்.
உடனே ஜோதிகாவுக்கு அலைபேசிய மம்முட்டி, கதையின் அவுட் லைனை சொல்லி இருக்கிறார். அதோடு, “இதில் நீங்கள் சிறப்பாக நடிக்க நிறைய வாப்புகள் இருக்கின்றன. இயக்குநரிடம் முழு கதையையும் கேளுங்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
பிறகு இயக்குநர் வந்து கதையைக் கூறவே ஜோகிதாக மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.