விஜய் 66 – வாரிசு படத்தை யார் இருக்குவார் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்த போது, திடீரென வம்சி பெயர் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களைக் கொடுத்து அசத்தியவர். தோழா படத்தின் மூலம் தமிழிலும் தனது முத்திரையை பதித்தார்.
விஜயும் தானும் இணைந்தது குறித்து இவர் கூறும்போது, “ நான் இயக்கிய ஐந்து படங்களில் நான்கை தயாரித்தவர் ராஜூ. இருவருக்கும் தயாரிப்பாளர் – இயக்குநர் என்றில்லாமல் சகோதரர்கள் போல அன்பு உண்டு.
அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டு அவரிடம் கொடுத்தேன். அவர், ‘ இந்த படத்துக்கு விஜய் சாரை ட்ரை பண்ணா என்ன’ என்றார்.
எனக்கு அதிர்ச்சி. ‘அவர் ஒப்புக்கொள்வாரா’ என கேட்டேன். அதற்கு தயாரிப்பாளர் ராஜு, ‘ஒப்புக்கொள்வது இரண்டாவது விசயம். அவரை சந்தித்துவிடலாமே’ என்றார்.
ஹீரோவும், இயக்குநருக்கும் இடையேயான முதல் சந்திப்பு என்பது காதலர்களின் முதல் மீட் போல ரொம்ப முக்கியமானது. அதனால பதட்டமா இருந்தேன்.
கதையைச் சொல்லி அவர் ஓகே சொல்றவரை அந்த பதட்டம் குறையவில்லை. காதல் ஓகே ஆன மாதிரி அத்தனை சந்தோசம் எனக்கு” என்கிறார்.
ஹீரோ ஹீரோயினுக்கு மட்டுமல்ல.. ஹீரோவுக்கும் இயக்குநருக்கும்கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும் போல.