Thursday, November 21, 2024

ராம்கியால் அடி வாங்கிய நிரோஷா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகில் நாயகன் – நாயகியாக கோலோச்சிய ராம்கி – நிரோஷா ஜோடி 1995ல் திருமணம் செய்து கொண்டு நிஜத்திலும் ஜோடியானது.


இந்த நிலையில் நிரோஷா தனக்கும் தனது கணவர் ராம்கிக்கும் இடையிலான ஆரம்பகால  காதல் குறித்து யு டியுப் சேனல் ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.

“ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும்போது ஒரே சண்டைதான்.  ‘காதல் காட்சிகளில் என்னைத் தொட அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் தொட்டு நடிப்பதற்கு முன்பு, அனுமதி கேட்பார், தெரியுமா” என சண்டை போடுவேன்.

பிறகு மெல்ல மெல்ல நட்பு துளிர்த்து காதலானது.  ஆனால்  இருவருமே பரஸ்பரம் ஐ லவ் யூ சொன்னதே இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

படப்பிடிப்பின் போது என்னுடன்  அண்ணனோ, அம்மாவோ வருவார்கள். அப்போது ராம்கியிடம்  பேச முடியாது.  ஆகவே  ஃபோனில் பேசுவேன். இது தெரிந்து , வீட்டில் அடி வாங்கியிருக்கிறேன். அந்த காலகட்டத்தை இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது” என தனது மலரும் நினைவுகளை நிரோஷா பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

Read more

Local News