ஓவரா நடிக்கிறார் சிவாஜி குறை கூறிய உதவி இயக்குனர்…!
ஸ்ரீதரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது உதவி இயக்குனராக இருந்த பாஸ்கர் சக உதவி இயக்குநர்களிடம் சிவாஜி பற்றி குறை கூறியுள்ளார். அது எப்படியோ அவர் காதுக்கு போய்விட்டதாம்.
உதவி இயக்குனரான பாஸ்கரிடம் சென்று என்னை பற்றி எதோ கூறிக்கொண்டு இருந்தீர்களே என்ன என்று கேட்டுள்ளார்.
பதறிப்போன பாஸ்கர் அவர் பெரிய நடிகர் ஆகிட்டே என்ன செய்யப்போராரோ என்று தயக்கத்துடன் நின்று இருக்கிறார்.அப்போது கூட இருந்த இயக்குனர்கள் உங்கள் நடிப்பு ஓவராக இருக்கிறது என்று அவர் கூறியதை சொல்லியிருக்கின்றனர்.
உடனே சிவாஜி ஸ்ரீதரை அழைத்து மீண்டும் இந்த காட்சியை படமாக்கி விடலாம் என்று கூ ற திரும்பவும் அந்த காட்சி படமாக்கப்பட்டது.
பின்னாளில் அந்த குறை கூறிய இயக்குனர் ரஜினியை வைத்து ’பைரவி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய எம்.பாஸ்கர் ஆவார்.