Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

’மல்லு வேட்டி மைனர்’ படத்தில் காணாமல் போன சீதா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் 85களில் பிரபு,கமல்,சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக  பிசியான நடிகையாக இருந்தவர் நடிகை சீதா. அவரை வைத்து 1990 ஆம் ஆண்டு மனோபாலா “மல்லுவேட்டி மைனர்” என்ற திரைப்படம் இயக்கி வந்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. இத்திரைப்படத்தில் சத்யராஜ், சோபனா, சீதா ஆகியோர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த படத்தில் சீதா நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது ஆனால் வெகு நேரமாகியும் அவர் வரவில்லை.

சீதாவின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது சீதாவின் தந்தை அவர் இங்கு இல்லை பார்த்திபனுடன் வீட்டை விட்டு சென்று விட்டார் என்றார். சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் அன்று காலை யாரிடமும் சொல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

படக்குழுவினர் பார்த்திபனிடம் சென்று “சீதா படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் கூறியிருக்கின்றனர். அதன் பிறகு சீதாவை அனுப்பி வைத்துள்ளார் பார்த்திபன்.

- Advertisement -

Read more

Local News