பாடலாசிரியர் மருதகாசியின் முதல் படம் ‘அல்லி பெற்ற பிள்ளை’ தோல்வியடைந்ததால் பெரிய நிதி நெருக்கடியில் தவித்து கொண்டிருந்த அவரை காப்பாற்ற எண்ணிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது கதையில் ஒன்றை கொடுத்து படமெடுக்க கூறினார்.
அந்த படம் தான் ’கற்பகம்’ இதில் முதலில் நடிப்பதற்கு சிவாஜி கணேசன், சாவித்திரி, ஒப்பந்தம் செய்யப்பட்டார். நிதி நெருக்கடியில் இருந்த மருதகாசியால் சொன்ன நேரத்திற்கு படத்தை தொடங்க முடியவில்லை. இதன் காரணமாக பிஸியாக இருந்த சிவாஜி கால்ஷீட்டும் இல்லாமல் போனது.
அடுத்து கோபால கிருஷ்ணன் உதவியுடன் எம்.ஜி.ஆரிடம் கதையை கூறி சம்மதம் வாங்கினார்கள். இந்த கதையில் எம்.ஜி.ஆருக்காக சிறு சிறு மாற்றம் செய்து முதலில் ஒரு காட்சியை படமாக்கபடுவதாக திட்டம். இந்த படத்திற்காக இயக்குனர் மற்றும் படத்தின் முக்கிய நடிகர்களை தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் கட்ட படப்பிடிப்புடன் படம் அப்படியே நின்றது.இதுகுறித்து தயாரிப்பாளர் மருதகாசியிடம் கேட்டார் கோபாலகிருஷ்ணன்.
நிதி நெருக்கடி இருப்பதால் தன்னால் படத்தை தயாரிக்க முடியாது என கூறியதால் கதையின் உரிமையை திரும்பப் பெற்று அவரே படத்தை தயாரித்தார். ஆனால் கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தார்.
படத்தின் தயாரிப்பாளரால் எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டு நடிக்க முடியாமல் போன திரைப்படம் கற்பகம்.