சினிமாவில் சிவாஜி,எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை சர்க்கர வர்த்தி யாக வலம் வந்தார் சந்திரபாபு. அந்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் பார்ப்பது அரிதான ஒன்றாக இருந்தாது. திறமையான, ரசனையான, சிறந்த நகைச்சுவையை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தவர் சந்திரபாபு. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவங்களை சந்தித்தவர் ஆனால் உடை என்று வரும் போது எந்த ஒரு நடிகர்களையும் இவருக்கு ஈடாக கூறமுடியாது.
அந்த கால தமிழ் சினிமாவில் கோட்,சூட், அணியும் பழக்கத்தை இவர் தான் கொண்டு வந்த தாரம் நேர்த்தியாக உடை அணிவதில் இவருக்கு இணை என்று யாருமே கிடையாது. தன்னைப் பார்த்து தான் புதிய நாகரிகத்தை பிறர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். அதற்கு தகுந்தார் போல் அவரது உடை,நடவடிக்கை மிடுக்காக இருக்கும்.
அவருக்கு மிகப் பிடித்த ஆடை என்றால் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், சட்டை யின் கையை மடித்து விட்டிருப்பது, பேண்ட் பாக்கெட்டின் வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பாராம் சந்திரபாபு.