நடிகைகளில் மறக்க முடியாத நாயகி என்றால் சாவித்திரி மிகச் சிறந்த ஒரு அற்புதமான கலை நாயகி பாசமலர், மிஸ்ஸியம்மா, திருவிளையாடல், களத்தூர் கண்ணம்மா,ஒவ்வொரு படத்திற்கு கதைக்கு தகுந்தது போல் உடல் மொழி, நடிப்பு என்று தன்னை மெருகேற்றி கொண்டே இருந்தார்.
அந்த காலகட்டத்தில் சரோஜாதேவி,பத்மினி,போன்ற சிறப்பான நடிகைகள் இருந்தாலும் சாவித்திரிக்கு ஈடுகொடுத்து நடிக்க யாராலும் முடியவில்லை என்பதே உண்மை. கலைக்காகவே பிறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி என்றால் அவருக்கு சமமான நடிப்பை கொடுத்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி.
சாவித்திரியை பார்த்து சக நடிகைகள் பயந்தார்கள் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நடிகர் திலகமும் பயந்தது தான். ஒரு பேட்டி ஒன்றில் சகோதிரி சாவித்திரியுடன் நடிக்கும் போது நான் சற்று பயத்துடனும் கவனமாகவும் நடிப்பேன். அவர் சிறந்த நடிகை எங்களுக்குள் நடிப்பு போட்டி இருக்கும் அதற்கு உதாரணம் சரஸ்வதி சபதம் என்றார் சிவாஜி.