Thursday, November 21, 2024

“எங்கப்பாவையா தப்பா பேசுற? – அடிக்கப் பாய்ந்த நடிகரின் மகன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று மதியம் சென்னையில் நடைபெற்ற ‘தேசிய தலைவர்’ பட விழாவில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை மரியாதைக் குறைவாகப் பேசியதாகக் கூறி அவரது மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், ஒரு பேச்சாளரை அடிக்க பாய்ந்தார்.

ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய திரைப்படம் தேசிய தலைவர்’.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இந்த விழாவில் மறைந்த மூத்த நடிகரான எஸ்.எஸ்..ராஜேந்திரனின் மகன் S.S.R.கண்ணன் பேசும்போது, தனது அப்பாவான எஸ்.எஸ்.ஆர்.தான் முத்துராமலிங்கத் தேவர் தனது கடைசி காலத்தில் மருத்துவமனையில் சேரும்போது உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார் என்று குறிப்பிட்டார். மேலும் தேவர் ஐயா அவர்கள் தனக்கு சிகிச்சையளிக்க பெண் நர்ஸ்கள் வேண்டாம். ஆண் நர்ஸ்கள்தான் வேண்டும் என்று கேட்டதையும் எஸ்.எஸ்.ஆர்.தான் செய்து கொடுத்தார் என்றும் கண்ணன் தெரிவித்தார்.

ஆனால் இவருக்கு அடுத்து பேச வந்த பேச்சாளர் ஒருவர், இதை முற்றிலும் மறுத்து, “வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேவரை சாதாரணமாக வந்து நலம் விசாரித்துவிட்டுப் போனார் எஸ்.எஸ்.ஆர்.” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டு ஆவேசமான எஸ்.எஸ்.ஆர். கண்ணன் “எங்கப்பாவையே தப்பா பேசுறியா.. நீ யாருய்யா.. நீ கூட இருந்து பார்த்தியா..?” என்று ஆவேசப்பட்டு அவரை அடிப்பதற்காகப் பாய்ந்தார். ஆனால் மேடையில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள்.

உடனேயே மேடையில் இருந்து கீழே இறங்கிய எஸ்.எஸ்.ஆர். கண்ணன் அந்தப் பேச்சாளரை கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்தச் சம்பவத்தினால் அந்த விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

Read more

Local News