Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ஓ மை கோஸ்ட்’ டீசர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.

மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை ‘கில்லி’ சேகர் வடிவமைத்திருக்கிறார். படத் தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-ரமேஷ் பணியாற்றுகிறார்கள். பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை அமைத்துள்ளார். D.வீரசக்தி, K.சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் R.யுவன். இவர் ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை நடித்து இயக்கியவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் வீரசக்தி மற்றும் சசிகுமார் பேசும்போது, “வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.

பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப் பெரிய நடிகை. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது தெரிந்தது.

இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார்.

படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லாவிதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்.

அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம்.” என்றார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் R.யுவன் பேசும்போது, “இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து  இருக்கிறோம்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன்தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும்போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார். அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார். அது மட்டுமல்ல, ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்று சொன்னார்.

படப்பிடிப்பில்  அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார். ஒரு முறை கேரவனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.

யோகி பாபு பிளாஷ்பேக் காட்சிகளில் மன்னர் காலத்தில் வருகின்ற ஒரு மந்திரி கதாபாத்திரம் செய்திருக்கிறார். சதீஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் புதியதாக இருக்கும்.

இது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் படமாகவும் விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும். இது பிளாக் காமெடி படமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்ற படமாக  இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News