HR Pictures சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா சிபு தயாரிப்பில், இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான, பிருந்தாவின் இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறியது.
இந்த விழாவில் நடிகர் ஆர்யா, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகைகள் குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் ஆகியோர் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.
இவ்விழாவில் நடிகர் ஆர்யா பேசும்போது, “நான் பிருந்தா மாஸ்டருடன் பல படங்களில் பணி புரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்ஷனோடுதான் இருக்கும். அது இந்தப் படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். ‘வேட்டையாடு விளையாடு‘ படத்தில் வரும் ‘கற்க கற்க’ பாடலில் வரும் ஆக்ஷன் பகுதிகளை அவர்தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசும்போது, “ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைக் களத்தை இயக்குநர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்“ என்றார்.
நடிகை குஷ்பூ பேசும்போது, “பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர்தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குநரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.“ என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “படத்தின் டீசரில் ஆக்ஷன் திரைப்படத்திற்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்தப் படம் ‘குண்டர்கள்’ எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்றுதான் தெரிகிறது.
பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது. இப்போது அவரது இரண்டாவது படம், அதற்கு நேர் எதிராக ஆக்ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது.
படத்தின் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும்போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கலாம்..” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “தயாரிப்பாளர் சிபுவிற்கு எனது நன்றிகள். அவர் எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை தரும் ஒருத்தர். படத்தின் ஹீரோ ஹிருது, குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் போல மாறி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குநர் பிருந்தா கடின உழைப்பை கொடுக்க கூடியவர், அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் ஹிருது ஹரூன் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பினையளித்த இயக்குநர் பிருந்தா அவர்களுக்கு நன்றி. படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்க அனைவரும் அதிக உழைப்பை கொடுத்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் ரியா சுபு பேசும்போது, “தக்ஸ்’ படத்தின் கதாப்பாத்திரங்களை வெளியிடும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு இயக்குநராக ஒரு சிறந்த படைப்பை உருவாக்கியுள்ள இயக்குநர் பிருந்தாவிற்கு எனது வாழ்த்துகள். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அவருடைய வளர்ச்சி இருக்கிறது, அது எனக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது.
படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியை அளித்து சிறந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி.” என்றார்.
இயக்குநர் பிருந்தா மாஸ்டர் பேசும்போது, “எனது முதல் படமான ‘ஹே சினாமிகா’வில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். எனது தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.“ என்றார்.