Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

Aha ஓடிடி தளத்தின் சொந்தப் படம் இன்று துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே.வி.துரையின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் இன்று சென்னையில் துவங்கியது.

இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற் காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.

சிலம்பரசன் நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’, ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான ‘குற்றம் குற்றமே’ ஆகிய திரைப்படங்களையும், ஆஹாவில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குத்துப் பத்து’ எனும் வலைதள தொடரையும் இத்தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே தயாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, கே.பி.ஒய் தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. மதன் மேற்கொள்கிறார்.

பேமிலி டிராமா / டிராஜிக்  காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே வி.துரை தயாரிக்கிறார்.

ஆஹா ஒரிஜினல் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

- Advertisement -

Read more

Local News