Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’.

இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் பல இடங்களில் காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளதாம் சென்சார் போர்டு. ‘GST’ என்று குறிப்பிடும் வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

ரீல் 2 – 44.35-ல் ஷாட் எண் 162-ல் இடம் பெற்றிருந்த ‘GST’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் கமல்ஹாசன் தன் நடு விரலை காட்டும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஒருவரைத் தாக்கும் காட்சியின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

லூசு’, ‘சைக்கோ’ உள்ளிட்ட இன்னும் பல தகாத வார்தைகள் படத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அவை அனைத்தும் சத்தமில்லாமல் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.

கழுத்தை வெட்டும் காட்சி, கோரமாக அதிலிருந்து ரத்தம் வழியும் காட்சி, கால்கள் துண்டாகும் காட்சி, தலை துண்டிக்கப்படும் காட்சி, வாயில் கத்தி இறங்குவது போன்ற வன்முறைகள் நிறைந்த சில காட்சிகளின் பல ஷாட்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் பாலியல் ரீதியான சில காட்சிகளிலும் கத்திரி போடப்பட்டுள்ளதாம். ஒரு பெண்ணின் பாலியல் பழக்க வழக்கத்தை விவரிக்கும் வசனம், அது தொடர்பான விசுவல்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆபாசமான முக்கல், முனகல் காட்சிகளின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளதாம்.

- Advertisement -

Read more

Local News