Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் படங்களை விமர்சித்தாரா ஆர்.ஜே.பாலாஜி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புகழ் பெற்ற ரேடியோ தொகுப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி ஒரு நிகழ்ச்சியொன்றில் சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை விமர்சித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது ‘பதாய் கோ’ என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் நடித்து, இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி தனியார் கல்லூரியொன்றில் சமீபத்தில் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெண்களை தவறாக சித்தரித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிற கருத்தையும் பள்ளி, கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என்று பிரித்து வைப்பது தவறு என்கிற கருத்தையும் முன் வைத்து பேசும்போது, படையப்பா’ மற்றும் ‘மன்னன்’ போன்ற படங்களை உதாரணமாகக் கொண்டு ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கிறார்.

இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்த் நடித்த மன்னன்’ மற்றும் ‘படையப்பா’ உள்ளிட்ட படங்களில் பெண்களை ரொம்பவும் தவறாகக் காட்டியதுதான் இன்றைய தலைமுறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மிகப் பெரிய வேற்றுமை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

படையப்பா’ படத்தில் “வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ.. வெளிநாட்டில் படிச்சிட்டு வரும் பொண்ணு கெட்டவ” என்று சொல்லியிருப்பாங்க.

மன்னன்’ படத்தில் நல்லா படிச்சுட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தியை கெட்டவங்க. வீட்ல காபி போட்டு கொடுக்கிற குஷ்புவை நல்லவங்களா காட்டியிருப்பாங்க…” என்று சொல்லியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இந்தப் பேச்சு ஆர்.ஜே.பாலாஜி மீது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்து எடுத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

- Advertisement -

Read more

Local News