Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

சிவன் வேடத்தில் யோகி பாபு நடிக்கும் டைம் டிராவல்லர் படம் ‘பெரியாண்டவர்’..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ’பூமராங்’, ‘தள்ளிப் போகாதே’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர்ஆர்.கண்ணன்.

இவர் இப்பொழுது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘மிர்ச்சி’ சிவா நடித்த ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்களை இயக்கம் செய்து முடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் ஆர்.கண்ணன் அடுத்து தான் இயக்கவிருக்கும் 12-வது படத்திற்கு பெரியாண்டவர்’ என்று பெயர் வைத்துள்ளார்.  

இந்தப் படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 9-வது படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் சிவன் வேடம் அணிந்து கதையின் நாயகனாக நடிகர் யோகிபாபு நடிக்கவிருக்கிறார். இது ஒரு டைம் டிராவ்லர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம், யோகி பாபு நடித்த ‘கோலமாவு கோகிலா’, ‘கூர்கா’, ‘தர்ம பிரபு’, ‘மண்டேலா’ பட வரிசையில் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் இது என்பதால் கபிலன் வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதி, வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார்.

யோகி பாபு சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் அரங்கத்தை ECR ரோட்டில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கிறார்கள்.

சிவ பெருமான் கதையோடு இணைந்த டைம் டிராவ்லர் கதை என்பதால், சி.ஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிக்காக மும்பையைச் சேர்ந்த பெரிய நிறுவத்துடன் பேசி வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோடை காலம் முடிந்ததும் ஆரம்பமாகிறது.

- Advertisement -

Read more

Local News