Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“KGF-3′ படம் எப்போது..?” – தயாரிப்பாளரின் பதில்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.ஜி.எஃப்.-3’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2018-ம் ஆண்டு இறுதியில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை முழு திருப்தி அடையச் செய்தது. துநாள் வரையில் வெளிவந்த டான் படங்களிலேயே சிறந்ததாக கே.ஜி.எஃப்.’ படம் கொண்டாடப்பட்டது.

படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான தொடக்கம் குறித்த காட்சி இடம் பெற்றதால் கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப இந்தப் படத்தின் 2-ம் பாகமும் தயாரானது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு 2021 ஜூலை மற்றும் 2022 ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கடைசியாக கடந்த 2022 ஏப்ரல் 13-ம் தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி 30-வது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இன்றளவும் ‘கே.ஜி.எஃப்.-2’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த அளவில் இந்தப் படத்தின் மொத்த வசூல் 1,200 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்த 2-ம் பாகத்தின் முடிவிலும் அடுத்தப் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து 3-ம் பாகம் எப்போது என்ற கேள்வியை எழுப்பியபடியே உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “2022 அக்டோபர் மாதத்திற்கு பின்னர் ‘கே.ஜி.எஃப்-3’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும்.  2024-ல் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக…” தெரிவித்துள்ளார்.

இத்தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News