Thursday, November 21, 2024

சூர்யா-ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா – ஜோதிகா, இயக்குர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும்விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்’ நிறுவன தலைவர் சந்தோஷ் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதால் இது குறித்து சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ஜெய் பீம்’ படத்தில் சில காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக இருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியும், இன்ன பிற வன்னியர் சங்கங்களும் எதிர்ப்புகளைக் காட்டியவுடன் அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதோடு இது குறித்து வருத்தம் தெரிவித்து நடிகர் சூர்யாவும், இயக்குநரும் அறிக்கையும் வெளியிட்டார்கள். இதோடு இந்தப் பிரச்சினை முடிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த அமைப்பு மட்டும் விடாமல் நீதிமன்றம்வரையிலும் சென்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News