Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“சின்ன வீடு’ மாதிரி அடல்ட் படத்தில் நடிக்கத் தயார்” – நடிகர் ஆரி அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கே.பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்த ‘சின்ன வீடு’ மாதிரியான அடல்ட் படங்களை எடுத்தால் அதில் நான் நடிக்கத் தயார் என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.

நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘3.6.9.’ என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது நடிகர் ஆரி இதைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவுக்கு வருமுன் இந்தப் படத்தைப் பற்றிய விசயங்களை கேட்டேன். இதுவொரு சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள்.

‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது  ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும்.  அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்தக் கருத்தில்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது எனக்கும் பிடித்திருந்தது.

இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. ‘பீஸ்ட்’ Vs ‘கே.ஜி.எஃப்.’. முதலில் இதை ஓப்பிடுவதே தவறு. ‘கே.ஜி.எஃப்.’ ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட்’ ஒரு மொழிக்கான படம்,  அதற்காக ‘பீஸ்டை’ தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு.

தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்குதான் ‘ஒத்த செருப்பு’ போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட ‘நாயகன்’ படமும் இங்குதான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக் கூடாது.

இதோ இந்தப் படத்தையும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படிப்பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோதான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. இப்போதுகூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார்.

சின்ன வீடு’ எனும் அடல்ட் படத்தைக்கூட குடும்பத்தோடு பார்க்கும்படி எடுத்தவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் அதில் நடிக்கத் தயார்…” என்றார். 

- Advertisement -

Read more

Local News