Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

ஹன்ஸிகா-முகேன் ராவ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய இணையத் தொடர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் புதிதாக ‘மை-3‘ என்ற இணையத் தொடரை தயாரிக்கிறது.

தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. 

ட்ரெண்ட்லவுட் நிறுவனம் தயாரிக்கும் இந்த இணையத் தொடரை தமிழ்த் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குநரான ராஜேஷ்.M இயக்குகிறார்.

இந்தத் தொடரில் நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத் தொகுப்பு செய்கிறார். 

பிரம்மாண்டமான படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வெளியிட்டனர்.

 

இத்தொடரில் நடிப்பது குறித்து நடிகை ஹன்ஸிகா பேசும்போது, “இது என்னுடைய முதல் இணைய தொடர். இந்தத் தொடரில் பங்கு கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எம்.ராஜேஷூடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். உலகளவில் பிரம்மாண்டமான படைப்புகளை தொடர்ந்து தந்து வரும் டிஸ்னி ஹாட்ஸ்டார்  நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவதில் பெருமையடைகிறேன்.

நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள்.” என்றார்.

நடிகர் முகேன் ராவ் பேசும்போது, “நான் இயக்குநர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன், அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கை கோர்க்க டிஸ்னி ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன். மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரியது. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுது போக்கு அனுபவத்தை வழங்கும்…” என்றார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் பேசும்போது, இணைய தொடரை இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். தற்போது மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதைவிட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை  இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், என்னுடைய இந்த ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

இது ஒரு ரொமான்ஸ் கலந்த காமெடி தொடர்.  இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி…” என்றார். 

- Advertisement -

Read more

Local News