‘காமன்மேன்’(Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையத்தில் வெளியானது.
ஆனால், “இந்த தலைப்பின் உரிமை எங்களிடம்தான் உள்ளது…” என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.
“டைரக்டர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018-ம் ஆண்டே இந்த “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக..” AGR RIGHT FILMS தெரிவித்தது.
தற்போது CHENDUR FILMS INTERNATIONAL ‘COMMON MAN’ என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லியிருக்கிறது. சசிகுமாரோ, “எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் பேசி தீர்த்து கொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுக, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
பதில் வர தாமதமான நிலையில், CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் ‘COMMON MAN’ என்கிற தலைப்பிலேயே படத்தின் டீசரை வெளியிட்டுவிட்டது.
இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.
AGR RIGHT FILMS ‘COMMON MAN’ என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதி சான்று வழங்கக் கூடாது என்று Censor Board-க்கு சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.
அதற்கு சென்சார் போர்டு இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து முறையான சான்றிதழை வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவருமாம்.
இதனால், ஏற்கெனவே இதை தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்ட சசிகுமார் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.