Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீஸன் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

தற்போது அதே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வேறு வடிவத்தில் மீண்டும் துவங்குகிறது. முந்தைய 5 சீஸன்களின் 1 மணி நேர தொகுப்புதான் தினமும் இரவில் 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால், தற்போது துவங்கியிருக்கும் ‘பிக்பாஸ் அல்டிமேன்’ என்றழைக்கப்படும் இந்தப் புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ஒரு மணி நேர தொகுப்பு நிகழ்ச்சியும் அதே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி இன்று துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய 5 சீஸன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர்தான் கலந்து கொள்கிறார்கள்.

வனிதா விஜயகுமார், நிரூப், தாமரை செல்வி, பாலாஜி முருகதாஸ், அம்மு அபிராமி, தாடி பாலாஜி, ஸ்ருதி, அபிநய், சுரேஷ் சக்கரவர்த்தி, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News