சட்ட விரோதமாக வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பனாமா நாட்டில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி அவர்களின் பெயர் பட்டியலையும் ஜெர்மனியை சேர்ந்த பனாமா பத்திரிகை ஒன்று 2016-ம் ஆண்டு செய்தி வெளியிட்டது. அதில் நடிகை ஜஸ்வர்யா ராயின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி 700-க்கும் மேற்பட்ட இந்திய அரசியவாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த பனாமா ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் மீது இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது சமமன் அனுப்பப்படடுள்ளது.
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோருக்கும் இது தொடர்பாக சம்மன் அனுப்பப்படவுள்ளதாம்.
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்து. அப்போது தனக்கு ஷூட்டிங் இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்குமாறு கூறியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.