Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இயக்குநர் த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்தது.  

இந்த நிலையில், உலக அளவில் சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதுக்கு ஜெய் பீம்’ திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா வெளியிடும் ‘கூழாங்கல்’ திரைப்படமும் ‘கோல்டன் குளோப்’ விருதுக்காக அனுப்பப்ட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் தேர்வாகும் என்பது குறித்து விரைவில் தெரியவரும். 

- Advertisement -

Read more

Local News