Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

மதுவுக்கு விளம்பரம் செய்த ‘பீஸ்ட்’ பட நாயகி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவில் குடி பழக்கம் என்பது இப்போது சர்வசாதாரணமானதுதான். அதிலும் சினிமாவுலகத்தில் அந்தப் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பேதமில்லாமல் இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவைவிடவும் வட இந்திய சினிமாக்களில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு மது பழக்கம் என்பது தண்ணி குடிப்பது போலத்தான். இருந்தும் இதுநாள்வரையிலும் யாரும் மதுவுக்கு விளம்பரம் செய்ததில்லை. அதிலும் நடிகைகள் யாரும் மது பிராண்டிற்கு விளம்பரத் தூதுவராக இருந்ததில்லை.

ஆனால், இப்போது முதல்முறையாக அந்த கட்டுப்பாட்டை உடைத்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தன்னுடைய இண்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ‘ரெட் லேபில்’ என்ற மது பிராண்ட்டிற்கு தானே விளம்பரம் செய்திருக்கிறார்.

மதுவை கிளாஸில் ஊற்றி ஐஸ் போட்டு, சோடா ஊற்றி வைத்துவிட்டு டான்ஸூம் ஆடுகிறார் பூஜா ஹெக்டே.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உட்பட பல இணையத்தள வாசிகளும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

“மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்று மத்திய, மாநில அரசுகள் உட்பட பல தரப்பினரும் அறிவுறுத்தி வரும் வேளையில் சமூகப் பொறுப்புள்ள நடிகை ஒருவர் இப்படி செய்யலாமா என்று பலரும் பூஜாவைக் கண்டித்து எழுதி வருகிறார்கள்.

‘பிசாசு’ படத்தின் மூலமாக சினிமாவுலகத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பின்பு தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகிவிட்டார். தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News