Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் கலர்புல் போஸ்டர் வெளியானது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Lyca Productions நிறுவனத் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், SK Productions நிறுவனத் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் டான்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘டாக்டர்’ படத்தில், திரையில் வெகு அழகான கெமிஸ்ட்ரியைப் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களுடன் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

அனிருத் (இசை), கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்).

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் கல்லூரியின் பின்னணியில் எப்போதும் வழக்கமான அம்சமான, மாணவர்கள் Vs பேராசிரியர்கள் என்ற கருப்பொருளைச் சுற்றி அமைந்திருப்பதுபோல் தோற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக் குழுவினர் தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News