Thursday, November 21, 2024

“எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவர் நடிகர் விஜய்தான்…” – இயக்குநர் பேரரசுவின் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“நடிகர் விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், இங்கே திரையுலகத்தில் இருக்கும் ஒரு சிலர்தான் அவரை ஜோசப் விஜய்யாக அழைத்து வருகிறார்கள்” என்று பிரபல இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். 

முதல் மனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “சினிமா ஒரு பெருமைக்குரிய விஷயம். ஆனால் இதே சினிமாவில் சிலர் சாதியை வைத்து இப்பொழுது பிழைப்பு நடத்துக்கிறார்கள். ஆனால் சாதி என்கிற வேற்றுமை சினிமாவில் இல்லை. சினிமா தொழிலில் யார் சாதி, மதம் பார்த்து பழகுகிறார்கள்…?

என் வாழ்க்கையில் மறக்க முடியாத மூன்று பேர். முதலில் என் நண்பன் யூசுப். பள்ளி காலத்து தோழன். அவனுடன்தான் நான் சினிமாவுக்குப் போவேன். அவன் இல்லையென்றால் சினிமா ஆர்வம் எனக்கு வந்திருக்குமா என்பது தெரியவில்லை. என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்ததே அந்த யூசுப்தான்.

அதன் பிறகு நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தது இயக்குநர் ராம நாராயணனிடம். அவர் நிறைய பக்தி படங்களை எடுத்திருக்கிறார். அதன் பிறகு எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தவர் விஜய்தான்.

என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தி, என்னை இயக்குநராக தெரிவதற்கு காரணமானவர் அவர்தான். அவர் தளபதி விஜய்யாக இருந்தார். இடையில் சிலர்தான் அவரை ஜோசப் விஜய்யாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தன்னை என்றைக்குமே கிறிஸ்தவராக நினைத்துக் கொள்ள மாட்டார். அவரும், நானும் இணைந்து பல கோவில்களுக்கு சென்றிருக்கிறோம். ஒரு முறை காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்தபோது பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் விஜய் சொன்னார். நாங்கள் இருவரும் சென்று வந்தோம். அவருக்கு எல்லா மதமும் ஒன்றுதான். நாம்தான் அவரை கிறிஸ்தவராக பார்க்கிறோம்.

எனக்கு சினிமா ஆர்வத்தை உருவாக்கி இங்கே அனுப்பி வைத்தவர் யூசுப். ஒரு முஸ்லீம். எனக்கு தொழில் கற்றுத் தந்தவர் இந்து. எனக்கு இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் ஜோசப் விஜய்.

இவர்கள் யாரும் எனக்கு மதம் பார்த்து வாய்ப்பு தரவில்லை. சினிமா துறையில் சாதியும் இல்லை. மதமும் இல்லை. யார் சினிமாவில் சாதியை வளர்க்கிறார்களோ அவர்களை அழித்துவிட வேண்டும்…” என்றார் இயக்குநர் பேரரசு.

- Advertisement -

Read more

Local News