நடிகை த்ரிஷா வெப் சீரீஸில் நடிக்கவிருக்கிறார். தமிழில் அல்ல தெலுங்கில் தயாராகும் ‘பிருந்தா’ என்ற வெப் சீரீஸில்..!
இந்த வெப் சீரீஸை அவினாஷ் கொல்லா என்னும் கலை இயக்குநர் தயாரிக்கவிருக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி கலை இயக்குநர்களில் ஒருவர். இந்த வெப் சீரீஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம்.
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த வெப் சீரீஸின் கதையைக் கேட்டவுடன் த்ரிஷா இதில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். கிரைம், திரில்லர் சப்ஜெக்ட்டில் இந்த சீரீஸ் எடுக்கப்படவுள்ளது. சூர்யா வெங்கலா என்ற இயக்குநர் இந்த சீரீஸை இயக்கவுள்ளார். சக்திகாந்த் கார்த்திக் இசையமைக்கிறார்.
த்ரிஷாவுடன் சாய் குமார், ஆம்னி, இந்திரஜித் சுகுமாரன், ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இந்த சீரீஸின் துவக்க விழா விஜயதசமி நாளன்று நடந்தது.
மேலும் ஒரு கன்னட படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாகவும் த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் பவன் இயக்கவுள்ளார்.