கடைசியில் அஜீத்துடன் மோத முடிவு செய்துவிட்டார் விஷால்.
விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படத்தை அடுத்த மாதம் அக்டோபர் 14-ம் தேதி நவராத்திரி விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை விஷால் நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். இதன்படி இந்தப் படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது.
இதே நாளில்தான் அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாக இருக்கிறது. அடுத்து 2022 பொங்கல் தினத்தன்று ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ளது. அதனால் அதற்கு முன்னதாக விடுமுறை தினங்கள் உள்ள நேரத்தில் ‘வலிமை’ படம் வெளியிட்டால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும். இதனால் ‘வலிமை’ நவராத்தி விடுமுறையில் வருவதை 2 மாதங்களுக்கு முன்பேயே படக் குழு பூடகமாகச் சொல்லியிருந்தது.
இப்போது இவர்களையும் முந்திக் கொண்டு விஷால் தனது படத்தை அறிவித்துவிட்டார். ஆக, விஷாலும், அஜீத்தும் ஒரே நாளில் மோதப் போகிறார்கள்.