அறிமுகக் கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஜீரக பிரியாணி’ என்ற பாடல் தற்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.
Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தில்தான் இந்தப் பாடல் இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ஶ்ரீராம்.
சமீபத்தில் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படமும் இந்தக் கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.
தற்போது படத்தின் வெளியீட்டுக்காக நேரம், காலம் பார்த்துக் கார்த்திருக்கும் படக் குழு படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களை வெளியிடத் துவங்கயுள்ளது.

இதில் முதல் பாடலாக ‘ஜீரக பிரியாணி’ என்ற காதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுகக் கவிஞரும், பத்திரிகையாளருமான ஜெகன் கவிராஜ் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
கவித்துவமாக அதே சமயம் காதலைப் போற்றிப் புகழும் வண்ணம்.. மிக எளிமையான வார்த்தைகளால்.. அடுக்கு மொழிகளாலும் இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பம்சமாகும்.
பாடல் வரிகளை கச்சிதமாக பொருந்தி வரும் இடங்களும், வீடியோவில் அதைத் தெரிவித்தவிதமும் அற்புதமாக இருக்க.. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்காகிவிட்டது.
நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கவிஞரும், ‘பூம்புகார்’, ‘பந்தபாசம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’ உள்பட பல வெற்றிப் படங்களில் வெற்றிப் பாடல்களை எழுதிய மாயவநாதனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தப் படத்தில் எழுதியிருக்கும் மற்றுமொரு பாடலின் லிரிக் வீடியோவும் மிக விரைவில் வெளியாகவுள்ளது.