இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் இயக்குநர் செல்வராகவனும் ஒரு நடிகராக இந்தப் படத்தில் மூலமாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இடையில் கொரோனா லாக் டவுன் காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாத சூழல் இருந்தது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி முழுமையாக முடிவடைந்துள்ளது.
இதற்காக இந்தப் படக் குழுவுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் செல்வராகவன் டுவிட்டரில் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்ன ஒரு அற்புதமான பயணம்..!? நிறைய கற்றுக் கொண்டேன். நட்சத்திரங்களுக்கும், படக் குழுவினருக்கும் நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் பின்னணி வேலைகள் இன்று துவங்கின. முதல் நபராக செல்வராகவனே டப்பிங் பேசியுள்ளார்.