நடிகர் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு ஓய்ந்து போயிருந்த அஜீத்தின் ரசிகர்களுக்கு சென்ற மாதம்தான் டபுள் வாலா ட்ரீட் கொடுத்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.
ஒரே நாளில் படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை வெளியிட்டு அஜீத்தின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள் படக் குழுவினர். மேலும், மேலும் என்று அஜீத்தின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்க.. நேற்று மாலை 7 மணிக்கு பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
நேற்று மாலை 7 மணிக்கு என்பது இரவு 10.45 மணிக்கு என்று மாற்றப்பட்டது. அப்போதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க அவர்கள் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது. பாடலும் வெளியானது.
பாடலின் இடையிடையே பாடல் காட்சிகளின் சிலவற்றை ஸ்டில்களாக காட்டப்பட்டன. அதில் அஜீத் இ்ன்னும் இளமையாக இருக்க.. பிடிக்காதவர்களுக்குக்கூட பிடிக்கும்வகையாகிப் போனது அஜீத்தின் தோற்றம்.
சந்தோஷம் கரைபுரண்டோட ரசிகர்கள் ரீஷேர், ரீஷேர் என்று செய்து கொண்டேயிருக்க.. லைக்ஸ்களும் குவிந்து கொண்டேயிருந்தன.
இந்தப் பாடல் வீடியோ வெளியாகி 12 மணி நேரத்திற்குள்ளாக பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது. லைக்ஸ் அளித்தவர்களின் எண்ணிக்கையும் 18 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இது அஜீத்தின் திரையுலக வரலாற்றில் ஒரு சாதனை என்றே கருதப்படுகிறது.