Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வைட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரிக்கும் திரைப்படம் ‘தேஜாவு’.

மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இவருடன் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம்’ கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தயாரிப்பு – K.விஜய் பாண்டி – White Carpet Films, இணை தயாரிப்பு – P.G.முத்தையா – PG Media Works, கதை, திரைக்கதை, இயக்கம் – அரவிந்த் ஸ்ரீநிவாசன், ஒளிப்பதிவு – PG முத்தையா, இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – அருள் E.சித்தார்த், வசனம் – கண்ணா ஸ்ரீவத்சன், அரவிந்த் ஸ்ரீநிவாசன், கலை இயக்குநர் – விநோத் ரவீந்திரன், சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இந்த ‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் மூவரும் இணைந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இதனையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News