Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

“காருக்கான வரியை விஜய் கட்டியிருக்கலாம்” – நடிகை கஸ்தூரி கருத்து..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“நடிகர் விஜய் தனது காருக்கான நுழைவு வரியை அரசுக்கு அளிக்கும் நன்கொடையாக நினைத்துக் கட்டியிருக்கலாம்…” என்று நடிகை கஸ்தூரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற காருக்கு நுழைவு வரியை செலுத்தாமல், அதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நுழைவு வரியை செலுத்திதான் ஆக வேண்டும் என்று சொல்லிய நீதிமன்றம் “விஜய் போன்ற நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தது. தற்போது இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி கருத்துத் தெரிவித்த நடிகை கஸ்தூரி “நடிகர் விஜய் இந்த வரியைக் கட்டியிருக்கலாம்…” என்று கூறியிருக்கிறார்.

அவர் இது பற்றிக் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரையில், மக்களுடைய பார்வையில் இருப்பவர்கள் எப்போதுமே கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். இது சினிமா உலகில் இருப்பவர்களுக்கேயான சாபம்..!

நாட்டில் எத்தனையோ பேர் எப்படியெல்லாம் நடந்து கொண்டாலும் கண்டு கொள்ளாத உலகம், சினிமா உலகில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே தொடர்ந்து கிசுகிசு பரப்பிவரும்.

பணத்துக்கு குறைவில்லாத, எல்லோராலும் போற்றக் கூடிய இடத்திலும் இருக்கிற விஜய், நியாயம் தன் பக்கத்தில் இருப்பதாக நினைத்திருந்தாலும்கூட நாட்டுக்கு கொடுக்கக் கூடிய நன்கொடையாக நினைத்து அந்தக் காருக்கான நுழைவு வரியைக் கட்டியிருந்திருக்கலாம்…!” என்று கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

- Advertisement -

Read more

Local News